வியாபாரி ........
பெருவெடிப்புப் பொந்தினுள்
எதேச்சையாய் விழுந்திட்ட
அக்னிக் குஞ்சொன்று ..........!
முளைவிடும் சிறுகொடியெனத்
தடுமாறிப் பரவியது
விடுதலைத் தீயென்று ......
தறுதலை தலைவனாக .... !
விடுதலை ஒரு விஷஜந்துவாக
வியாபாரமாக மாறி வருவதை
பலஆண்டுகள் கடந்துதான் உணர்ந்தேன்
ஒருநாளில் ....................,
துப்பாக்கிகள் மக்களைநோக்கின ..............!!
கர்த்தாள்கள் மக்களைக் கசக்கின
மேலும் சில நாட்களில்
பார்வையாளர்கள் தாக்கப் பட்டனர்
பங்காளர்கள் கட்டாயமாக்கப் பட்டனர்
விடுதலை என்றவேட்கை பாதைதவறி
பயங்கரவாதம் என்ற சர்வாதிகாரமாய் ......
ஊருக்குஒளி தந்தமின் கம்பங்கள்
அதிகாலைகளில் அச்சமூட்டும் களுமரங்களுமாகி ........
கோரக்கொலைகள் மக்கள்நலனுக்கேஎன நியாயப்படுத்தப்பட
என்னைநான் கண்ணாடியில் பார்ப்பதைத்தவிர்த்தேன்
ஆனாலும் இவைஎல்லா வற்றையும்விட
அதீதவிஷத்துடன் துரோகிபட்டியல் நீண்டு...........
மிகநீண்டு வளரத் துவங்கியிருந்தது
விசித்திர வேட்கை யொன்றை
சுமந்தவண்ணம் தேசமெங்கும் ஆயுததாரிகள்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி
ஆயுதமோகத்தை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரியாய் வாலிபர்கள்
தேசத்தையே பார்க்கஅஞ்சிய தேசியத்தலைவன்
நடுநிசிப் பேய்களாய் வீரம்செறிந்த வேங்கைகள்
பின்னிரவின் தாக்குதல் வெடியோசைகள்
மக்கள்மனதுக்குள் இருக்கும் மதுதோய்ந்த
விடுதலை அக்னிமேல் காற்றாய்வீசி
யாகம்வளர்க்கும் பிரச்சாரப் பீரங்கிகள்
தமிழ்மொழி சுடராகப் பற்றிஎரிகிறது
மதம் கொண்ட யானைகளாய்
சினம் கொண்டுமோதித் தோற்கின்
மானமுள்ள தமிழ் வீரனாம்
தன் அவமானம் மறைக்க
மின்கம்ப மரணதண்டனைக்கு ஒருஅப்பாவி........!!!
கொலைகளுடன் பயணிப்பது அவர்களுக்கு
இலகுவானதும் பாதுகாப்பானதுமாக இருக்க
நானோ பறவை இறகைஇழுத்துச் செல்லும்எறும்பாய்
மக்கள்என்ற ஒற்றைவார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்த வண்ணமிருக்கிறேன்
இந்த தமிழீழம் என்னும்
விபச்சாரவியாபாரிகளின் கால்களுக்குள் மிதிபட்டுக்கொண்டே................
.....................................................................................!